ஆயிரக்கணக்கான வருடங்களாய் – Ayirakanakkana Varudangalai Song lyrics

Deal Score+4
Deal Score+4

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – Ayirakanakkana Varudangalai Song lyrics

1.ஆயிரக்கணக்கான வருடங்களாய் எம்
ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம்
இஸ்ரவேல் ஜனங்களை ஆளவரும் – எம்
யேசு ரட்சகரே எழுந்தருளும்.

ஓசன்னா தாவீதின் புதல்வா
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா

2.மாமரி வயிற்றில் பிறந்தவரே மா
யோசேப்பின் கரங்களில் வளர்ந்தவரே
மானிட குலத்தில் உதித்தவரே எம்
மன்னவரே எழுந்தருள்வீரே.

3.கானான் மணத்திற்கு அழைக்கப்பட்டீர் – அங்கு
கலங்கினவர் பேரில் இரக்கப்பட்டீர்
கொண்டுவரச் சொன்னீர் சுத்தத்தண்ணீர் அதை
நற்கந்த ரசமாக்கிப் பருகச் செய்தீர்.

4.குருடர் அநேகர் ஒளி பெற்றார் – முடம்
கூன், செவிடர் பலர் சுகம் பெற்றார்
குஷ்டர் அநேகர் நலம் பெற்றார் – எம் கடவுளே
எம்மோடு வருவீரே.

5.யூதேயா நாட்டில் மகிழ் பெற்றீர் எம்
யூத ராஜா என்று முடி பெற்றீர்
எருசலேம் நகர் தனில் களிப்புற்றீர் எம்
யேசு ரட்சகரே அரசாள்வீர்.

6.பாவிகளைத் தேடிவந்தவரே -எம்
பாவங்களைப் போக்க வல்லவரே
பாடுகள் பட்டு உழைத்தவரே -எம்
பராபரனே உட்செல்வீரே.

7.கோவேறு குட்டியே ஆசனமாய் – எம்
குழந்தையின் துணியே பஞ்சணையாய்
கிளைகளே உமது ஜெயக்கொடியாய்- எம்
கர்த்தனே சீக்கிரம் நடப்பீரே.

8.உலகமே உமது அரிய வேலை எம்
உயிருமே உமது மாபுதுமை
உலகத்தை ஆண்டு வருபவரே – எம்
உலகரசே உட்புகுவீரே.

Ayirakanakkana Varudangalai Song lyrics in English 

1.Ayirakanakkana Varudangalai Em
Aandvarae Ummai Ethirpaarththom
Isravel Janangalai Aalavarum Em
Yeasu Ratchakarae Eluntharulum

Osanna Thaaveethin Puthalvaa
Osanna Osanna Osanna

2.Maamari Vayittril Piranthavaro Ma
Yoseappin Karangalil Valarnthavare
Maanida Kulaththil Uthithavarae Em
Mannavarae Eluntharulveerae

3.Kanaan Manaththirkku Alakkiappatteer Angu
Kalanginavar Pearil Irakkappatteer
Konduvara sonneer Suththa thanneer Athai
Narkantha Rasamaakki Paruga Seitheer

4.Kurudar Anegar Oli Pettaar Mudam
Koon Seavidar Palar Sugam Pettaar
Kustar Anegar Nalam Pettaar Em kadavulae
Emmodu Varuveerae

5.Yutheayaa Naattil Magil Petteer Em
Yutha Raaja Entru Mudi Petteer
Erusalem Nagar Thanil Kalipputteer Em
Yeasu Ratchakar Arasaalveer

6.Paavikalai Theadi Vanthavarae Em
Paavangalai Pokka Vallavarae
Paadugal Pattu Ulaiththvarae Em
Paraaparanae Utselveerae

7.kovearu Kuttiyae Aasanamaai Em
Kulanthaiyin Thuniyae Panjanaiyaai
Kilaikalae Umathu Jeyakodiyaai Em
Karththanae Seekkiram Nadappeerae

8.Ulagamae Umathu Ariya Vealai Em
Uyirumae Umathu Maa Puthumai
Ulgaththai Aandu varupavarae Em
Ulagarase Utpuguveerae

ஆயிரக்கணக்கான வருடங்களாய் – எம்
ஆண்டவரே உம்மை எதிர்ப்பார்த்தோம்
இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் – எம்
இயேசு இரட்சகரே எழுந்தருளும்

ஓசான்னா! தாவீதின் புதல்வா
ஓசான்னா! ஓசான்னா! ஓசான்னா!

மாமரி வயிற்றினில் பிறந்தவரே – மா
முனிசூசை கரங்களில் வளர்ந்தவரே
மானிடர் குலத்தினில் உதித்தவரே – எம்
மன்னவரே எழுந்தருள்வீரே

தாவீது அரசரின் புத்திரரே – ஓர்
தெய்வீக முடியோடு வந்தவரே
தருமர் எனப்புகழ் அடைந்தவரே – எம்
தேவனே தேவனே வருவீரே.

அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் – மா
அருள் தபோதனரால் புகழப்பட்டீர்
ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் – உம்
ஆதிபிதாவிடம் பதவி பெற்றீர்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo