எல்லாம் படைத்த சர்வ – Ellam Padaitha Sarva
எல்லாம் படைத்த சர்வ – Ellam Padaitha Sarva
பத்துக் கட்டளைகள்
சரணங்கள்
1. எல்லாம் படைத்த சர்வ
வல்லவ னொன்றே – அல்லா
தில்லை மரம் கல்லைத் தெய்வ
மென்று தொழாதே
2. நல்லான் அவரைத் தொழு
செல்வந் தழைக்கும் – பொல்லா
நாசப் பேய் வணக்கம் நித்ய
மோசம் விளைக்கும்
3. வீணாகத் தெய்வ நாமம்
வீண் டிகழாதே – நன்கு
வேதம் படி ஓய்வுநாளில்
வேலை செய்யாதே
4. கோணாமல் தந்தை தாயைப்
பேணிக் கனஞ்செய் – பொங்கு
கோபம் கொலை வேசித்தனம்
பாவ மிவை மெய்
5. களவை யகற்று கள்ளச்
சாட்சி சொல்லாதே – மனங்
காய்ந்து பிறன் பொருள் மேலே
காதல் கொள்ளாதே
6. எந்தவாறுனக்குப் பிறன்
செய்யவேண்டுமோ – முற்றும்
அந்தவாறு தவறா
தவனுக்கும் நீ செய்
7. துய்ய நீதிக்குத் திருப்தி
செய்து மரித்த – கிறிஸ்
தையர் பாதம் அண்டு வேற
டைக்கலமில்லை
1.Ellam Padaitha Sarva
Vallavan Ontrae Allaa
Thillai Maram Kallai Deiva
Mentru Thozhathae
2.Nallaan Avarai Thozhu
Selvan Thazhaikkum Polla
Naasa Peai Vanakkam Nithya
Mosam Vilaikkum
3.Veenaaga Deiva Naamam
Veenadigalaathae Nangu
Veadham Padi Ooivu Naalil
Vealai Seiyaathae
4.Konaamal Deiva Thaayai
Peani Kanajsei Pongu
Kobam Kolai Veasithanam
Paava Mivai Mei
5.Kalavai Yagattru Kalla
Saatchi Sollaathae Manam
Kaainthu Piran Porul Mealae
Kaathal Kollathae
6.Enthavaarunakku Piran
Seiyavendumo Muttrum
Anthavaaru Thavaraa
Thavanukkum Nee Sei
7.Thuiya Neethikku Thirupthi
Seithu Mariththa Kiris
Thaiyai Paatham Andu Veara
Adaikalamillai