ஐயா வாங்க அம்மா வாங்க-Ayya Vaanga Amma Vaanga
ஐயா வாங்க அம்மா வாங்க
இயேசு நல்ல மீட்பர் தானுங்க – 2
பாவத்தின் சம்பளம் மரணமுன்னு சொன்னாங்க – 2
பாவத்த விட்டிடுங்க இரட்சிப்ப பெற்றிடுங்க – 2
மீண்டும் பிறந்திடுங்க ஆவிய பெற்றிடுங்க – நீங்க
மீண்டும் பிறந்திடுங்க பரிசுத்த ஆவிய பெற்றிடுங்க
தேவாதி தேவனை துதித்து பாடுங்க அல்லேலூயா – 2
அன்பை கூறிடுவோம் நேசத்தை சொல்லிடுவோம் – 2
ஆத்தும ஆதாயம் எப்பவும் செய்திடுவோம் – வாங்க – 2
வேதத்தை தினமும் வாசிச்சு பாருங்க அல்லேலூயா – 2
வாங்க ஜெபித்திடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் – 2
இயேசுவின் நாமத்தினால் வெற்றியை பெற்றிடுவோம் – எப்பவும் – 2
கர்த்தரை பாடியே கைத்தலம் போடுங்க அல்லேலூயா – 2
ஆனந்தம் பாடிடுவோம் அற்புதம் கூறிடுவோம்
ஆனந்தம் பாடிடுவோம் அவர் அற்புதம் கூறிடுவோம்
ஆடி பாடிடுவோம் ஆமென் அல்லேலூயா – வாங்க -2