சப்தமாய்ப் பாடி சத்துருவை – Sapthamaai paadi sathuruvai
சப்தமாய் பாடி சத்துருவை
சங்கிலியால் கட்டுவோம்
நித்தம் நித்தம் கர்த்தர் நாமம்
பாடி உயர்த்திடுவோம்
இராஜா இயேசு ஜீவிக்கின்றார்
இரத்தம் சிந்தி ஜெயம் தந்தார்
1. புதுப் பாடல் பாடி மகிழ்வோம்
புனிதர்கள் சபையிலே
துதிபலி எழும்பட்டும்
ஜெயக்கொடி பறக்கட்டும்
எழுப்புதல் தேசத்தில் பொழுதுபோல் உதித்ததும்
2. உண்டாக்கினார் நம்மை
உள்ளம் மகிழட்டும்
ஆளுநர் அவர்தானே
இதயம் துள்ளட்டும்
3. தமது ஜனத்தின் மேல்
பிரியம் வைக்கின்றார்
வெற்றி தருகிறார்
மேன்மைப்படுத்துவார்
4. கர்த்தரை உயர்த்தும் பாடல்
(நம்) வாயில் இருக்கட்டும்
வசனம் என்ற போர்வாள்
(நம் )கையிலே இருக்கட்டும்