தோத்திரம் தோத்திரம் இயேசு தேவா
ஸ்தோத்திரம் (5) இயேசு தேவா
ஸ்தோத்திரம் (5) துதியுமக்கே – தேவா
1. கருவில் கண்டீர் ஸ்தோத்திரம் தேவா
தெரிந்து கொண்டீர் ஸ்தோத்திரம் தேவா
என்னை அழைத்தீர் ஸ்தோத்திரம் தேவா
உந்தனின் சேவை செய்ய – தேவா (2)
2. எனக்காய் வந்தீர் ஸ்தோத்திரம் தேவா
சிலுவையில் மரித்தீர் ஸ்தோத்திரம் தேவா
இரத்தம் சிந்தினீர் ஸ்தோத்திரம் தேவா
என்னை இரட்சிக்கவே – தேவா (2)
3. உயிர்த்தெழுந்தீர் ஸ்தோத்திரம் தேவா
பரலோகம் சென்றீர் ஸ்தோத்திரம் தேவா
வரங்களை அளித்தீர் ஸ்தோத்திரம் தேவா
உமக்கென்று வாழ்ந்திடவே – தேவா (2)
4. எக்காளம் தொனிக்கும் ஸ்தோத்திரம் தேவா
தூதர்கள் சூழ ஸ்தோத்திரம் தேவா
மறுபடியும் வருவீர் ஸ்தோத்திரம் தேவா
பரலோகம் கொண்டு செல்ல என்னை – தேவா (2)