பரிசுத்த பிதாவே உம்மை நான் -parisutha pithavae ummai
பரிசுத்த பிதாவே உம்மை நான்
என் முழு உள்ளத்தோடே துதிப்பேன்
தேவகுமாரனே உம்மை நான்
ஸ்தோஸ்தரிப்பேன் பெலத்தோடே
அப்பா பிதாவே நீரே நல்ல தேவன்
இயேசு என் ராஜா என்னை என்றும் நடத்தும்
(1)
உம்மை நான் போற்றி புகழ்ந்திடுவேன்
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
உம்கரத்தில் நான் களிமண் தான்
வனைந்திடுமே பண்படுத்திடுமே
(2)
சேற்றில் கிடந்த என்னையுமே
தூக்கி எடுத்தீர் என் இயேசுவே
உம் இரத்தத்தால் என்னை கழுவி
மீட்டுக்கொண்டீர் நான் வாழ்வு பெற