புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்- Puththam Puthu Varudam Puthumaigal Seivaar
புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்- Puththam Puthu Varudam Puthumaigal Seivaar
புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்
நித்தம் நிதம் வாழ்வில் கருண்யம் சொரிவார்
இம்மானுவேலர் எபிநேச கர்த்தர்
இம்மட்டும் காத்து நம்மோடிருப்பார்
தேவைகள் யாவையும் நிறைவாக சந்திப்பார்
பாரங்கள் சுமைகள் கடனெல்லாம் தீர்த்துடுவார்
நடைகள் வழுவாமல் உறுதியாய் தாங்கிடுவார்
விண்ணப்ப ஜெபங்களுக்கு பதில் தந்து தேற்றிடுவார் – இம்மானுவேலர்
நோய்கள் நீக்கி புதுபெலன் ஈந்திடுவார்
உற்சாகத்தோடு உழைத்திட செய்திடுவார்
அயராது தூங்காது நிதம் என்னை ஏந்திடுவார்
கண்மணி போல் என்னை கருத்தாக காத்திடுவார்-
ஒவ்வொரு நாளும் புது வழி திறந்திடுவார்
ஓயாமல் துதித்து மகிழ்ந்திட செய்திடுவார்
புஷ்டியும் பசுமையும் குறையாமல் நடத்திடுவார்
நன்மையும் கிருபையும் தொடர்ந்திட செய்திடுவார்- இம்மானுவேலர்
புத்தம் புது வருடம் புதுமைகள் செய்வார்- Puththam Puthu Varudam Puthumaigal Seivaar