Aakaayam Panithoova Maamannan – ஆகாயம் பனிதூவ மாமன்னன்
ஆகாயம் பனிதூவ
மாமன்னன் உலகினில் பிறந்தார்
கார்கால குளிரிலே
மாமரி பாதம் பிறந்தார்
இருளை போக்கும் ஒளியாய்
அருளை தந்திட பிறந்தார்
ஏழையின் கோலம் எடுத்து
மாடடை குடிலதனில் பிறந்தார்
விண்ணோர் மகிழ்து பாட
மண்ணோர் எழுந்து ஆட
மேய்ப்பர் புடை சூழ
தேவ மகன் பிறந்தார்
இம்மனுவேலனே என் ஏசு பலனே
உம பாதம் சரணடைந்தேன்
என் வாழ்வில் ஒலி ஏற்ற வா
வானில் வெள்ளி தோன்ற
கண்டார் ஞானி மூவர்
பொன்னும் பொருளும் தந்து
பணிந்தார் உள்ளம் மகிழ்ந்து
இம்மனுவேலனே என் ஏசு பலனே
உம பாதம் சரணடைந்தேன்
என் வாழ்வில் ஒலி ஏற்ற வா