Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
ஆனந்தம் ஆனந்தம்
ஆண்டவர் பிறந்துவிட்டார் ஆனந்தம்
பேரின்பம் பேரின்பம்
இயேசு பாலன் பிறந்துவிட்டார் பேரின்பம்
எல்லா ஜனத்துக்கும்
மிகுந்த சந்தோசம் உண்டாக்கும் நற்செய்தி
அது தூர தேசமாம்
பரலோகில் இருந்து வந்த நற்செய்தி
கொண்டாடுங்க கொண்டாடுங்க
மகிழ்ச்சியோடு கொண்டாடுங்க
கொண்டாடுங்க கொண்டாடுங்க
மகிழ்ச்சியோடு கொண்டாடுங்க
1. மங்கி எரியும் திரி அனையாது
பொங்கும் இன்பம் வாழ்வில் குறையாது
திரியை ஏற்றி எண்ணெய் ஊற்றி
உலகில் ஒளி வீச வைத்திடுவார்
உலகில் ஒளியாக வைத்திடுவார்
2. அங்கு இங்கு அலையாது
தங்கு பாலன் பாதம் குறைவேது
நல்ல பங்கு தெரிந்து கொண்டு
எங்கும் மனம் வீச செய்திடுவார்
உலகில் நறுமணம் வீச செய்வார்