ஆனந்தமே பரமானந்தமே – Aananthamae Paramaananthamae
ஆனந்தமே பரமானந்தமே – இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே
சரணங்கள்
1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய் கிடைத்திடினும் — ஆனந்தமே
2. கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?
கைவேலையில்லாத வீடொன்றை மேலே தான்
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ — ஆனந்தமே
3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் — ஆனந்தமே
4. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
தொண்டர் எமை அண்டி வந்திடுனும்
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
துன்பத்தினூடே அனுப்பிடுவார் — ஆனந்தமே
5. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனே
என் நேசர் தன் முக ஜோதியதேயல்லாமல்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை — ஆனந்தமே
6.கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே
காரணமின்றி கலங்கேனே நான்
விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே — ஆனந்தமே
Aananthamae Paramaananthamae song lyrics in English
Aananthamae Paramaananthamae Yesu
Annalai Andinork Aananthamae
1.Intha Puvi Oru Sonthamallaventru
Yesu En neasar Mozhinthanarae
Ikkattu Thunbamim Yesuvin Thondarkku
Engeayae Pangaai Kidaithidinum
2.Koodara Vaasikalaagum Namakkingu
Veedentrum Naadentrum Sollalamo
Kai Vealaiyillatha Veedontrai Mealae Thaan
Seivean Ena Solli Pogalaiyo
3.Ennullamae Unnil Sanjalam Yean Veenaai
Kanneerin Pallathakkallo Ithu
Seeyon Nagaraththil Seekkiram Sentru Naam
Jeya Geetham Paadi Magilnthidalaam
4.Thunbangal Thollai Idukkan Idar Evai
Thondar Emai Andi Vanthidunum
Solli mudiyatha Aaruthal Kirubaiyai
Thunbaththinoodae Anuppiduvaar
5.Yesuvae Seekkiram Iththarai Vaarumean
Yealai Veguvaai Kalangukireanae
En Neasar Than Muga Jothiyatheayallaamal
Inbam Tharum Porul Yeathumillai
6.Karthavae Neer Enthan Kaarnya Kottaiyae
Kaaranamintri Kalangeanae Naan
Viswaasa Pealaiyai Mealogam Vanthida
Meaviyae Sukkaan Pidithidumae