ஆராதிக்க கூடினோம் – Aaraathikka Koodinom Lyrics
ஆராதிக்க கூடினோம் – Aaraathikka Koodinom Lyrics
ஆராதிக்க கூடினோம்
ஆர்ப்பரித்து பாடிடுவோம்
வல்ல இயேசு நல் தேவன்
என்றென்றும் அவர் நம் தேவன்
1. தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே
மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே
மகிமை மகிமையே என் மனம் பாடுதே
மக்கள் மத்தியில் என் மகிழ்ச்சி பொங்குதே – ஆராதிக்க
2. சீயோன் பெலனே வெற்றி சிகரமே
சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்
ஜீவன் பெலனும் ஆசீர்வாதமே
நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே – ஆராதிக்க
3. கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே
கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார்
அல்லேலூயா என் ஆவி பாடுதே
ஆராதனை அழகு என்னை கவர்ந்து கொண்டதே – ஆராதிக்க