Aarum Thunai Illayae Lyrics – ஆரும் துணை இல்லையே
Aarum Thunai Illayae Lyrics – ஆரும் துணை இல்லையே
பல்லவி
ஆரும் துணை இல்லையே எனக்
காதியான் திருப்பாலா – உன்தன்
ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத்
தாளுவாய் யேசுநாதா.
அனுபல்லவி
சீர் உலாகு பூங்காவில் ஓர் கனி
தின்ற பாதகம் மாற்றவே
சிலுவை மீதினிலே உயிர்விடும்
தேவனே என் சுவாமி. – ஆரும்
சரணங்கள்
1.முந்து மானிடர் தந்த தீவினை முழுவதும் அறவேண்டியே
முள்முடியுடன் குருசில் ஏறிய முன்னவா கிருபை கூர்வையே
சிந்தும் உன் உதிரத்தில் என் வினை தீர்த்திரசியும்; ஐயனே
தீயபாவி எனக்கு வேறொரு செயலிடம் துணை இல்லையே! – ஆரும்
2.தந்தை தாயாரும் மைந்தர் மாதரும் சகலரும் உதவார்களே
சாகும்நாளாதில் நீ அலால் எனைத் தாங்குவார்களும் உண்டுமோ?
சொந்தம் நீ எனக்கன்றி வேறொரு சொந்தமானவர் இல்லையே
சுற்றமும் பொருள் அத்தமும் முழபத்தமே என் தெத்தனே!- ஆரும்
3.கள்ளனாயினும் வெள்ளனாயினும் பிள்ளை நான் உனக்கல்லவோ?
கர்த்தனே வலப்பக்கமேவிய கள்ளனுக் கருள் செய்தையே
தள்ளி என்னைவிடாமல் உன்னடி தந்து காத்தருள் அப்பனே
தயவாய் ஒரு குரசில் ஏறிய சருவ ஜீவ தயா பரா – ஆரும்
4.நன்றி அற்றவனாகிலும் எனைக் கொன்று போடுவதாகுமோ?
நட்டமே படும் கெட்ட மைந்தனின் கிட்ட ஓடினதில்லையோ?
கொன்றவர்க் கருள் செய்யும் என்று பிதாவை நோக்கிய கொற்றவா
குற்றம் ஏது செய்தாலும் நீ எனைப் பெற்றவா பொறுத் தாள்வையே – ஆரும்
5.பக்தியேதும் இலாது மாய சுகத்தை நாடுய பித்தனாய்ப்
பாழிலே என்றன் நாள் எலாங் கெடுத் தேழையாகினேன் என் செய்வேன்?
சத்ருவான பிசாசினால் வரும் தந்திரம் கொடிதல்லவோ?
தஞ்சம் அற்றவன் ஆகினேன் உன் தஞ்சல் கூறும் அனாதியே
Aarum Thunai Illayae Lyrics in English
Aarum Thunai Illayae Enak
Kaathiyaan Thiruppaala Unthan
Ainthu Kaayaththin Adaikalam Kodu
Thaaluvaai Yesunaatha
Seer Ulaagu Poongaavil Oor Kani
Thintra Paathagam Maattravae
Siluvai Meethinilae Uyirvidum
Devanae En Swami Aarum
1.Munthu Maanidar Thantha Theevinai Muluvathum Aravendiyae
Mulmidiyudan Kurusil Yeariya Munnavaa Kiruba Koorvaiyae
Sinthum Un Uthiraththil En Vinai Theerthirasiyum Aiyanae
Theeya Paavi Enakku Vearoru SEyalidam Thunai Illaiyae
2.Thanthai Thaayaarum Mainthar Maatharum Sagalarum Uthavaarvakalae
Saagum Naalathil Nee Alaal Enai Thaanguvaarkalum Undumo
Sontham Nee Enakkantri Vearoru Sonthamaanavar Illaiyae
Suttramum Porul Aththamum Muzhapaththamae En Theththanae
3.Kallanaayinum Vellanaayinum Pillai Naan Unakallavo
Karththanae Valapakkamaeviya Kallanukarul Seithaiyae
Thalli Ennai Vidaamal Unnadi Thanthu Kaaththarul Appanae
Thayavaai Oru Kurasil Yeariya Saruva Jeeva Thayaa Paraa
4.Nantri Attravanaakilum Enai Kontru Poduvathaagumo
Nattamae Padum Ketta Mainthanin Kitta Oodinathillaiyo
Kontravarukarul Seiyum Entru Pithaavai Nokki Kottravaa
Kuttram Yeathu Seithaalum Nee Enai Pettravaa Porunt Thaalvaiyae
5.Bkthiyethum Elathu Maaya Sugaththai Naaduya Piththanaai
Paalilae Entran Naal Elankoduthu Yealaiyaakinean En Seivean
Sathuruvaana pisaasinaal Varum Thanthiram Kodithallavo
Thanjam Attravan Aakinean Un Thankal Koorum Anaathiyae