Aathiyilae Vaarthai Neerae – ஆதியிலே வார்த்தை நீரே
1.ஆதியிலே வார்த்தை நீரே
உன்னத தேவன் நீரே
படைப்பினில் கானா உம் மகிமை
கிறிஸ்துவில் இன்று நாம் கண்டோம்
இது அழகின் நாமமே-2
இயேசு இராஜா நாமம் மேன்மையே
இது அழகின் நாமமே
ஈடு இணையில்லையே
இது அழகின் நாமமே
இயேசுவின் நாமம்
2.பரத்திலே பாவி என்னை சேர்க்க
பரனே ஏனக்காய் பலியானீரே
என் பாவத்தை பார்க்கிலும் உம் அன்பு பெரியதே
எதுவும் நம்மை பிரிக்காதே
இது அற்புத நாமமே-2
இயேசு இராஜா நாமம் மேன்மையே
இது அற்புத நாமமே
ஈடு இணையில்லையே
இது அற்புத நாமமே
இயேசுவின் நாமம்-2
3.மரணத்தை ஜெயித்தீர்
திரைச்சீலையை கிழித்தீர்
பாவத்தின் வேரை நீர் முறித்தீர்
பரலோகம் முழங்கும்
உம் துதியை பாடும்
என் தேவன் நீர் உயிர்த்தெழுந்தீர்
உம்மைப்போல் யாரும் எங்குமே இல்லை
இன்றும் என்றும் நீரே இராஜா
இராஜ்ஜியம் உமது
மகிமை உமது
எல்லா நாமத்திலும் மேலானவர்
இது வல்லமையின் நாமமே-2
இயேசு இராஜா நாமம் மேன்மையே
இது வல்லமையின் நாமமே
ஈடு இணையில்லையே
இது வல்லமையின் நாமமே
இயேசுவின் நாமம்-2