அன்பர்க்கருள் புரிவோனை – Anbarukarul Purivonai

Deal Score0
Deal Score0

அன்பர்க்கருள் புரிவோனை – Anbarukarul Purivonai

1. அன்பர்க்கருள் புரிவோனை, ஆதியாய் நின்ற சீமானை,
துன்பமகற்றிடுங் கோனை, தூயமனமுளத்தானை,
பொன் பொலியும் பெருமானை, பூரண நேசமுற்றானை,
இன்பமளித்திடுந்தேனை, இலங்குந்திருமேனி கண்டேன்;
கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

2. சத்தியவாசகப்போதன், சாற்று முரைப்பிடிவாதன்,
பத்திசேர் சற்பிரசாதன், பாவமகற்றும் பொற்பாதன்,
எத்திசையோர் தேடும் நாதன், இந்நிலம் வந்தமா நீதன்,
முத்தியளித்திடு வேதன், மூவாதிருமேனி கண்டேன்;
கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

3. பாவமகற்று பகாரன், பசாசுகளுக்கபகாரன்,
ஜீவனளிக்கும் உதாரன், தீவினைபோக்குங் குமாரன்,
சாவையழித்தமாவீரன், தாரணியோர்க்குபகாரன்,
தேவ சுரரேத்துந்தீரன், சோதி திருமேனி கண்டேன்;
கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

4. ஆதியும் அந்தமுமான, அல்பா ஒமேகாவுமான,
நீதி இரக்கமுமான, நித்திய ஜீவனுமான,
ஓதிய வேதமுமான, உத்தம மார்க்கமுமான,
மேதினியிலுருவான மீட்பர் திருமேனி கண்டேன்;
கண்டேன் அவர் திருத்தேகம்; கல்வாரி மலைதனில் கண்டேன்.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo