APPA NEENGATHAN ENAKKU – அப்பா நீங்கதான் எனக்கு
APPA NEENGATHAN ENAKKU – அப்பா நீங்கதான் எனக்கு
அப்பா நீங்கதான் எனக்கு
அம்மா நீங்கதான்
வேற ஒரு சொந்தம் இல்லையே இயேசப்பா
உம்மை விட்டால் பந்தம் இல்லையே
ஆபத்திலே நீங்கதான் உதவி செய்யணும்
நான் அழுகும்போது நீங்கதான் கண்ணீர் துடைக்கணும் – 2
ஆதரிப்பார் யாரும் இல்லையே எனக்கு
உம்மைவிட்டால் தஞ்சம் இல்லையே – 2
பசியினாலே எனது உடல் வாடிப்போகயில்
நான் புசிப்பதற்கு அப்பம் தந்த புண்ணியர் நீரே -2
தாகத்தினால் தண்ணீர் கேட்கையில்
எனக்கு ஜீவதண்ணீர் தந்தவர் நீரே
தெருதெருவாய் அனாதையாய் நான் அலைந்தேனே
என்னை தேடிவந்து வாழவைக்கும் தெய்வமும் நீரே -2
பயப்படாதே நான் இருக்கிறேன் என்று
ஆறுதலாய் அணைத்து கொண்டீரே -2