Belamula Nagaramam Yesuvndai – பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை

Deal Score+1
Deal Score+1

Belamula Nagaramam Yesuvndai – பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை

1. பெலமுள்ள நகரமாம் இயேசு வண்டை
பயமின்றி ஓடி நீ வந்திடுவாய்
சஞ்சலத்திற்கொரு வழியில்லையே
சந்ததம் அவர் நம்மைக் காத்துக் கொள்வார்

2. நிலையில்லா உலகத்தின் அலைகளாலே
அலைந்திடும் பயனென்ன புதல்வனே நீ
விசுவாசக் கப்பலில் ஷேமமாக
யாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம்

3. கழுகு போல் பறந்து நீ உன்னதத்தில்
வாழ்கின்ற ஜீவியம் வாஞ்சித்துக் கொள்
காத்திருந்திடுகையில் ஈந்திடுவார்
பெருக்கமுள்ள பெலன் மக்களுக்கு

4. மரணம் தான் வருகினும் பயப்படாதே
விரைந்துன்னைக் கர்த்தர் தாம் காத்திடுவார்
யாதொன்றும் உன்னைப் பயப்படுத்த
எங்குமில்லை யென்று விசுவாசிப்பாய்

5. ஆறுதலடையு மந்நாடுசென்று
இயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்
பரம சுகம் தரும் ஊற்றுகளில்
பரனோடு நித்தியம் பானம்செய்வோம்

Belamula Nagaramam Yesuvndai song lyrics in India

1. Belamulla nagaramaam Yesu vanndai
Bayamindri oodi nee vanthiduvaai
Sanjalaththirkoru vazhiyillaiye
Santhatham avar nammai kaathukolvaar

2. Nilaiyillaa ulagaththin alaigalaalae
Alaindhidum payanenna puthalvanae nee
Visuvaasak kappalil shemamaaga
Yaaththirai seybavarkku logam vendaam

3. Kazhugu pol paranthu nee unnathaththil
Vaazhginra jeeviyam vaanjiththuk kol
Kaaththirunthidugaiyil eenthiduvaar
Perukkamulla Belan makkalukku

4. Maranam dhaan varuginum Bayappadaathae
Virainthunnaik karththar thaam kaaththiduvaar
Yaathondrum unnai Bayappaduththa
Engumillai yendru visuvaasippaai

5. Aaruthaladaiyu manaadu sendru
Yesuvin maarbil naam aananthippom
Parama sugam tharum oottrukalil
Paranodu niththiyam Baanam seivom

காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்கின் பேரை இட்டான்.
ஆதியாகமம் | Genesis: 4: 17

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo