Devan Manithanaai Aaaginaar- தேவன் மனிதனாய் ஆகினார்

Deal Score+2
Deal Score+2

1. தேவன் மனிதனாய் ஆகினார்
தீயோர் பிணையாய் பூ மேவினார்;
தேவலோகம் களிகூருதே
தேவ குமாரனைப் போற்றுதே

பல்லவி

போற்றுவோம் போற்றுவோம்
புண்ணிய நாதன் இயேசுவையே

2. காலம் நிறைவேறினபோது
கன்னி கற்பத்தி லுற்பவித்து;
தாலம் புரக்கப் பெத்லகேமில்
இயேசு பிறந்தார் சந்தோஷமே – போற்

3. கூளிச் சிரசை நசுக்கவும்
கூறிய சாப மளிக்கவும்
வேதியர் மா மறை ஓதினார்,
வேதனும் பாலகனாயினார் – போற்

4. மேய்ப்பர்க்கு நற்செய்தி கிட்டுது,
மேலோக சேனைகள் பாடுது;
மாட்டிடை மன்னன் துயில்கிறார்
வானோர் வியந்துற்றுப் பார்க்கிறார் – போற்

5. ஞானிகள் மாளிகை தேடினார்,
நாதன் ஆவின் குடில் நாடினார்;
ஆயர் புல்லணை தரிசித்தார்,
ஆனந்தித்துப் பிரஸ்தாபித்தார் – போற்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
World Tamil Christian The Book of Song collections
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo