Happy Christmas – ஹேப்பி கிறிஸ்மஸ்
ஹே ஹே… ஹேப்பி கிறிஸ்மஸ் ஹேப்பி கிறிஸ்மஸ்
கொண்டாடுவோம் வாங்க…
மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ்
கொண்டாடுவோம் வாங்க…
ஆஹா எல்லோருக்கும் செய்தி
நம் பாலன் பிறந்த செய்தி
இத கொண்டாடுவோம் வாங்க
இனி பண் பாடலாம் நீங்க
சரணம் – 1
பாலன் இயேசு பிறந்துவிட்டார் மாட்டு தொழுவிலே
பாவிகளை மீட்க்க வந்தார் ஏழை வடிவிலே
பாவ இருள் போக்க வந்த தேவ மைந்தனே
பாமரனாய் மண்ணில் வந்தார் அன்னை மடியிலே
சந்தோசமா ஆடு… சங்கீதத்த பாடு…
ஆனந்தமா கூடு… பாலன் இயேசுவை நீ தேடு…
பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி புதுப் பாட்டு பாடு
பாலன் இயேசு பிறந்ததாலே நீ சந்தோஷமா ஆடு
சரணம் – 2
வான தூதர் வாழ்த்து செய்தி சொல்லி சென்றனர்
இடையர்களும் செய்தி கேட்டு மகிழ்ந்து நின்றனர்
ஞானிகள் மூவரும் பார்க்க வந்தனர்
பொன் வெள்ளி போலம் வைத்து வணங்கி மகிழ்ந்தனர்
நட்சத்திரம் பாரு… விடியலை நீ தேடு…
மணியோசை கேளு… குழந்தை இயேசுவை நீ பாரு…
பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி புதுப் பாட்டு பாடு
பாலன் இயேசு பிறந்ததாலே நீ சந்தோஷமா ஆடு