இம்மட்டும் ஜீவன் தந்த – IMMATTUM jeevan thantha beryl natasha

Deal Score+2
Deal Score+2

இம்மட்டும் ஜீவன் தந்த – IMMATTUM jeevan thantha beryl natasha

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த் ஸ்தோத்தரிப்போமாக-2
நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து-2
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்-2 – இம்மட்டும்

1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும்,
கனாவைப் போலேயும் ஒழியும்;
வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,
மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது
கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே-2
கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன்-இம்மட்டும்

2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
பரம பாதையைத் தொடர்ந்தோம்
வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம் ,
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;
கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்;
காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் — இம்மட்டும்

3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு
தந்து , நொறுங்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த வினோதமாய் — இம்மட்டும்

IMMATTUM jeevan thantha beryl natasha

 

Immattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த

நீங்கள் புறஜாதிகளை நோக்கிப் பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.
Behold ye among the heathen, and regard, and wonder marvellously: for I will work a work in your days, which ye will not believe, though it be told you.
ஆபகூக் : Habakkuk:1:5

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo