கர்த்தராம் இயேசுவை பாடி – Kartharaam Yesuvai Paadi
கர்த்தராம் இயேசுவை பாடி – Kartharaam Yesuvai Paadi
கர்த்தராம் இயேசுவை பாடித் துதிப்போம்
களிப்பாய் சபை நடுவில்
உம் திவ்விய அன்பு எம்மில் பொங்க
உயர்ந்த நாமம் புகழ்வோம்
1.தாயின் வயிற்றினில் உருவாகுமுன்
தேவா எம்மைத் தெரிந்தெடுத்தீர்
சொல்லி முடியா உம் மாட்சிமையை எண்ணி
அல்லேலூயா பாடுவோம் – கர்த்தராம்
2.கர்த்தர் செய்த பல நன்மைகட்காய்
என்ன செலுத்துவோம்
இரட்சிப்பின் பாத்திரம் தூக்கி எடுத்தோராய்
கர்த்தர் நாமம் தொழுவோம் – கர்த்தராம்
3.உம்மைப்போல் எம்மை நேசித்தவர்
உலகில் எவருமே இல்லை
நன்றியால் எமது உள்ளம் பூரித்திட
இன்றும்மை வாழ்த்திடுவோம் – கர்த்தராம்
4.இயேசுவே உம்பாரம் சேர்ந்திடும் நாள்
என்ன பேரின்பம் பெற்றிடுவோம்
எங்கள் உள்ளம் நாடும் தூய சீயோனிலே
இன்பமாய் ஆராதிப்போம் – கர்த்தராம்