Muthal Raththa Saatchiyaai – முதல் ரத்தச் சாட்சியாய்
Muthal Raththa Saatchiyaai – முதல் ரத்தச் சாட்சியாய்
1. முதல் ரத்தச் சாட்சியாய்
மாண்ட ஸ்தேவானே, கண்டாய்;
வாடா கிரீடம் உன்னதாம்
என்றுன் நாமம் காட்டுமாம்.
2. உந்தன் காயம் யாவிலும்
விண் பிரகாசம் இலங்கும்
தெய்வதூதன் போலவே
விளங்கும் உன் முகமே.
3. மாண்ட உந்தன் மீட்பர்க்காய்
முதல் மாளும் பாக்கியனாய்,
அவர்போல் பிதா கையில்
ஆவி விட்டாய் சாகையில்.
4. கர்த்தர்பின் முதல்வனாய்
ரத்த பாதையில் சென்றாய்
இன்றும் உன்பின் செல்கின்றார்
எண்ணிறந்த பக்தர், பார்!
5. மா பிதாவே, ஸ்தோத்திரம்,
கன்னி மைந்தா, ஸ்தோத்திரம்,
வான் புறாவே, ஸ்தோத்திரம்
நித்தம் நித்தம் ஸ்தோத்திரம்.