உம் அவதாரம் பாரினில் – Um Avathaaram Paarinil
உம் அவதாரம் பாரினில் – Um Avathaaram Paarinil
1. உம் அவதாரம் பாரினில்
கண்ணுற்ற பக்தனாம் யோவான்;
கர்த்தா, உம் சாந்த மார்பினில்
அன்பாகச் சாயவும் பெற்றான்.
2. சாவுறும் தன்மை தேவரீர்
தரித்தும், திவ்விய வாசகன்,
அநாதி ஜோதி ரூபம் நீர்,
என்றே தெரிந்துகொண்டனன்.
3. கழுகைப் போல் வான் பறந்தே
மா ரகசியம் கண்ணோக்கினான்;
நீர் திவ்விய வார்த்தையாம் என்றே
மெய்யான சாட்சி கூறினான்.
4. உம் அன்பு அவன் உள்ளத்தில்
பெருகி பொங்கி வடிந்து,
அவன் நல் ஆகமங்களில்
இன்னும் பிரகாசிக்கின்றது.
5. சீர் கன்னி மைந்தா, இயேசுவே,
பூலோக ஜோதியான நீர்,
பிதா, நல்லாவியோடுமே
என்றென்றும் துதி பெறுவீர்.
Um Avathaaram Paarinil song lyrics in english
1.Um Avathaaram Paarinil
Kannuttra Bakthanaam Yovaan
Karththaa Um Saantha Maarbinil
Anbaaga Saayavum Pettraan
2.Saavurum Thanmai Devareer
Thiriththuvam Dhiviya Vaasakan
Anaathi Jothi Roobam Neer
Entrae Thearinthu Kondanan
3.Kalukai Poal Vaan Paranthae
Maa Ragasiyam Kannokkinaan
Neer Dhiviya Vaarththaiyaam Entrae
Meiyaana Saatchi Koorinaan
4.Um Anbu Avan Ullaththil
Pearugi Pongi Vadinthu
Avan Nal Aagamangalil
Innum Pirakaasikintrathu
5.Seer Kanni Mainthaa Yeasuvae
Poologa Jothiyaana Neer
Pithaa Nallaviyodumae
Entrentrum Thuthi Pearuveer