ஐயோ நான் ஒரு பாவ – Aiyo Naan Oru Paava Lyrics

Deal Score+1
Deal Score+1

ஐயோ நான் ஒரு பாவ – Aiyo Naan Oru Paava Lyrics

1. ஐயோ நான் ஒரு பாவ ஜென்மி ஆனேனே!
ஆண்டு ரட்சித் தருளாய் – மனுவேலனே!
உய்யும்படி தெய்வமே உன்னை அல்லால் எனக்கோர்
ஒதுக்கிட முண்டோ வேறே? – மனுவேலனே!

2. நல் வரமாய்ப் பெற்ற நீதி சுசி பாக்கியம்
ஞானம் எலாம் இழந்து – மனுவேலனே!
சொல்ல வெட்கம் அநீதி சுசிகேடு நிர்ப்பாக்கியம்
துர்ப்புத்தியும் அடைந்தேன் – மனுவேலனே!

3. மாட்சி உறும் சிங்கார வனமாம் என துளத்தை
மங்கு காடாக்கி னேனே – மனுவேலனே!
ஆட்சி கொளும் உன்சுத்த ஆலயமாம் என் நெஞ்சை
அலகைக் கிடம் ஆக்கினேன் – மனுவேலனே!

4. உன்னை முழுப் பலத்தால் நேசியாமலே நெஞ்சும்
உரங்; கொண்ட பாவி ஆனேன் – மனுவேலனே!
என்னை நிகராக என் பிறனை நேசியாமல் நான்
இகலுற் றிருந்தேனையா – மனுவேலனே!

5. துப்புர வாம் சுத்தக் கண்ணனே உன் முன் இன்னும்
துணிகர மாய் நடந்து – மனுவேலனே!
இப்படி ஜென்ம கன்ம பாவத்தால் கேடடைந்த
ஏழைப் பாவிக் கிரங்காய் – மனுவேலனே!

Aiyo Naan Oru Paava Lyrics in English

1.Aiyo Naan Oru Paava Jenmi Aaneanae
Aandu Ratchi Tharulaai Manuvealanae
Uyiyum Deivamae Unnai Allaal Enakkor
Othukkida Mundo Vearae

2.Nal Varamaai Pettru Neethi Susi Baakkiyam
Gnaanam Elaam Elanthu Manuvealanae
Solla Vetkam Aneethi Susikeadu Nirbakkiyam
Thurpuththiyum Adainthean

3.Maatchi Urum Singaara Vanamaam Ena Thulaththai
Mangu Kaadaakkineanae Manuvealanae
Aatchi Kollum Un Suththa Aalayamaam En nenjai
Alagaikidam Aakkinean

4.Unnai Mulu Belaththaal Neasiyaamalae Nenjum
Urang Konda Paavi Aanean Manuvealanae
Ennai Nigaraaga En Piranai Neasiyaamal Naan
Egalluttiruntheanaiya

5.Thuppuravaam Suththa Kannanae Un Mun Innum
Thunikaramaai Nadanthu Manuvealanae
Eppadi Jenma Kanma Paavaththaal Keadadaintha
Yealai Paavikirangaai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo