Nadu Vaanilae Minnuthae – நடு வானிலே மின்னுதே
நடு வானிலே மின்னுதே மின்னுதே அழகாகவே
ஒரு நட்சத்திரம் ரட்சகர் பிறந்ததை கூறுதே
பெத்லகேம் ஊரில் முன்னணை மீதில்
மெதுவாகவே நகர்ந்ததே நின்றதே
நடு வானிலே கேட்குதே கேட்குதே சங்கீதமே
விண் தூதரின் சேனைகள் பாடிடும் பாடலே
விண்ணில் மகிமை மண்ணில் அமைதி
மனுஷர்களின் மனதிலே பிரியமே
நடு வானிலே மேகங்கள் னடுவினில் ஒரு நாளிலே
என் ரட்சகர் தோன்றுவார் தூதர்கள் சூழவே
அவரோடு நானும் சேர்ந்திடுவேனே
எந்நாளுமே இன்பமே இன்பமே