Nanbarae Naam Ontru Kooduvom – நண்பரே நாம் ஒன்று கூடுவோம்
பல்லவி
நண்பரே நாம் ஒன்று கூடுவோம்
பண்புற நாம் நன்று பாடுவோம்
நண்ணரும் நம் மறை நாதனார்
மண்ணில் நர உருவானதால்
1. மந்தையில் மேய்ப்பர்கள் தூதனால்
விந்தையான மொழி கேட்டதால்
சிந்தை மகிழ்ந்து அந்நேரமே
கந்தை பொதிந்தோனைக் காணவே – நண்
2. வெய்யோன் வருமிட வான்மீனோ?
துய்யோன் தருதுட இசை தானோ?
மெய்யன் திருமிட ஆற்றலோ?
அய்யன் பதமிட போற்றலோ? – நண்
3. கர்த்தத்துவம் நிறை பாலனே!
கங்குல் பகல் காக்கும் சீலனே!
எங்கும் உனதொளி வேதனே!
தங்கும் படியருள் போதனே! – நண்
4. அந்தரமானோர் புகழ் தேவே!
சுந்தரமானோர் மகிழ் கோவே!
தந்திரப் பாந்தத் தலைமேலே
வந்தீரோ மிதிக்கக் காலாலே – நண்