பாலர் ஞாயிறிது – Paalar Gnayirithu pasamaai song lyrics
பாலர் ஞாயிறிது – Paalar Gnayirithu pasamaai song lyrics
பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும் ,
பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும் .
அனுபல்லவி
தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப்- பாலர்
சரணங்கள்
1.பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம் ,
பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம் ,
பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம் ,
ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் – பாலர்
2.தேடி வந்தலையும் தேசிகருண்டு ,
பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,
கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு
நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு.–பாலர்
3.இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே ,
இன்னும் நித்யமும் பாதுகாப்பாரே,
அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்
எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு -பாலர்
Paalar Gnayirithu pasamaai song lyrics in english
Paalar Gnayirithu pasamaai Vaarum
Paadi Yesu Naamam Paninthu Pottrum
Thaalanthai Puthaithidaamal Thaamathamae Pannidaamal
Gnaala Meethirangi Vantha Swami Yesu Anbaai Enni
1.Paalar Sangaththaalae Maatchimai Pettrom
Paalar Neasar Patham Paniya Kattrom
Paaril Jothi Veesukintra Parisutha Vedham Kattrom
Ooril Engum Nam Panjaangam Oothum Paaliyar Neasan Kandom
2.Theadi Vanthalaiyum Deasikarundu
Paadi Aarparikka Paalar Paattundu
Koodi Vanthu Aananthikka Kootta Pandikaiyumundu
Naadi Meetpar Paatham Paalar Theada Ellaa Yethumundu
3.Intru Mattum Nammai Yeanthi Vanthaarae
Innum Nithyamum Paathukappaarae
Anbin Sangam Ithaikondu Aathma Neasar Seithu Varum
Enni Mudiyaa Nanmaiyai Yegamaaga Ennikondu