Deva Irakkam Illayoo song lyrics – தேவா இரக்கம் இல்லையோ
Deva Irakkam Illayoo song lyrics – தேவா இரக்கம் இல்லையோ
பல்லவி
தேவா, இரக்கம் இல்லையோ? – இயேசு
தேவா, இரக்கம் இல்லையோ?
அனுபல்லவி
ஜீவா, பரப்ரமஏ கோவா, திரித்துவத்தின்
மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் , ஒரே — தேவா
சரணங்கள்
1. எல்லாம் அறிந்த பொருளே – எங்கள்
இல்லாமை நீக்கும் அருளே – கொடும்
பொல்லா மனதுடைய கல்லான பாவிகளைக்
கொல்லாதருள் புரியும் நல்லாயன் யேசுநாதர்! — தேவா
2. எங்கும் நிறைந்த ஜோதியே – ஏழைப்
பங்கில் உறைந்த நீதியே – எங்கள்
சங்கடமான பாவ சங்கதங்களை நீக்கும்
துங்க இசரவேலின் வங்கிஷ க்ரீடாபதி ! — தேவா
3. வேதாந்த வேத முடிவே – ஜெக
ஆதாரம் ஆன வடிவே – ஐயா,
தாதாவும் எமைப் பெற்ற மாதாவும் நீயே – யேசு
நாதா, ரட்சியும், வேறே ஆதாரம் எமக்கில்லை — தேவா
Deva Irakkam Illayoo song lyrics in English
Deva Irakkam Illaiyoo Yesu
Deva Irakkam Illaiyoo
Jeeva Paraparama Yehovaa Thiriththuvaththin
Moovaal Ontraaga Vantha Thaaveethin Mainthan Orae
1.Ellaam Arintha Porulae Enga
Illamai Neekkum Arulae Kodum
Pollaa Manathudaiya Kallaana Paavikalai
Kollatharul Puriyum Nallaayan YesuNaathar
2.Engum Nirantha Jothiyae Yealai
Pangil Uraintha Neethiyae Engal
Sangadamaana Paava Sankathangalai Neekkum
Thunga Isravelin Vankisha Kreedapathi
3.Vedhantha Vedha Mudiyae Jega
Aathaaram Aana Vadivae Aiyya
Thaathaavum Emmai Pettra Maathaavum Neeyae
Naatha Ratchiyum Verae Aathaaram Emakkilai