பகல்நேரப் பாடல் நீரே – Pagal Nera Paadal
பகல்நேரப் பாடல் நீரே
இரவெல்லாம் கனவு நீரே
மேலான சந்தோஷம் நீரே
நாளெல்லாம் உமைப் பாடுவேன் – என்
1. எருசலேமே உனை மறந்தால்
வலக்கரம் செயல் இழக்கும்
மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்
நாவு ஒட்டிக் கொள்ளும் – என்
மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானைய்யா
என் மணவாளரே உமை மறவேன்
2.கவலைகள் பெருகி கலங்கும்போது
மகிழ்வித்தீர் உம் அன்பினால்
கால்கள் சறுக்கி தடுமாறும் போது
தாங்கினீர் கிருபையினால் என்
3.தாய்மடி தவழும் குழந்தைபோல
மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்
உம்மையே நம்பியுள்ளேன் மகிழ்ச்சி
4.பார்வையில் செருக்கு எனக்கில்லை
இறுமாப்பு உள்ளத்தில் என்றுமில்லை
பயனற்ற உலகத்தின் செயல்களிலே
பங்கு பெறுவதில்லை