Pavamellam Pokkidave Lyrics – பாவமெல்லாம் போக்கிடவே

பாவம் எல்லாம் போக்கிடவே பரமன் இயேசு வந்தார்
சாபம் எல்லாம் நீக்கிடவே தம்மை பலியாய் தந்தார்
அனுபல்லவி
விட்டு விடாதே வெறுத்து தள்ளாதே – உனக்காய்
தொட்டிலில்லா தொழுவத்திலே பிறந்த இயேசுவையே
சரணம்
சுத்தமில்லா கஷ்டப்பட்ட குஷ்டரோகியவனை
சித்தமுண்டு சுத்தமாகு என்று இயேசு தொட்டார்
குஷ்டம் நீக்கி மேன்மையான சுகத்தினையே கொடுத்து
இஷ்டமான மனிதனாக மாற்றி வாழ செய்தார் – 2
விட்டு விடாதே வெறுத்து தள்ளாதே – உனக்காய்
தொட்டிலில்லா தொழுவத்திலே பிறந்த இயேசுவையே
சூம்பின கையுடையவனை ஆலயத்தில் கண்டு
வீம்பர் பார்த்திருக்க இயேசு கையை நீட்டு என்றார்
துன்பமான அவனுடைய கையின் தோஷம் போக்கி
இன்பமான தேறுதலை இயேசு அன்று கொடுத்தார் – 2
விட்டு விடாதே வெறுத்து தள்ளாதே – உனக்காய்
தொட்டிலில்லா தொழுவத்திலே பிறந்த இயேசுவையே
பன்னிரண்டாண்டுகள் பெரும்பாடுள்ள பெண்ணொருத்தி
அன்பர் இயேசுவின் ஆடை ஓரத்தையே தொட்டாள்
வல்லமை இயேசுவிலிருந்தே புறப்பட்டு
துல்லியமாய் அவளை குணமாக்கிற்றே அன்று – 2
விட்டு விடாதே வெறுத்து தள்ளாதே – உனக்காய்
தொட்டிலில்லா தொழுவத்திலே பிறந்த இயேசுவையே
மூச்சில்லாமல் போன மகனை சுமந்தவருடன் கூட
வீச்சில்லாமல் அழுதுகொண்டு தாயொருத்தி வந்தாள்
அழாதே என்று இயேசு பாடைதனை தொட்டு
எழாதிருந்த தனயனுக்கு திரும்ப உயிரை கொடுத்தார் – 2
விட்டு விடாதே வெறுத்து தள்ளாதே – உனக்காய்
தொட்டிலில்லா தொழுவத்திலே பிறந்த இயேசுவையே
படுக்கையிலே கிடந்தவனை கூரை திறந்து இறக்க
இடுக்கண் களையும் இயேசு அவர்கள் விசுவாசத்தை கண்டார்
அக்கணமே அவனுடைய பாவங்களை மன்னித்து
அக்களிப்புடன் படுக்கைதனை சுமந்து நடக்க செய்தார் – 2
விட்டு விடாதே வெறுத்து தள்ளாதே – உனக்காய்
தொட்டிலில்லா தொழுவத்திலே பிறந்த இயேசுவையே
தத்தி தத்தி தாவிச்செல்லும் மனித மனம் நீக்கு
நித்தம் உன்னை எச்சரிக்கும் தேவ சத்தம் நோக்கு
தேவ கோபம் மூளுமுன்னே திருந்தி வாழ பாரு
பாவம் போக்க இயேசு நாதர் பாதம் வந்து சேரு – 2