VANTHAREY SONG
வந்தாரே உலகத்திலே
பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் -2
பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே
எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே-2
வந்தாரே உலகத்திலே
பிறந்தாரே உள்ளத்திலே -2
வார்த்தையானவர்
தேவனானவர்
மாம்சமானவர்
எங்கள் ஆவியானவர் -2
1. ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே
வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே -2
படைத்தவரே என்னை தேடி வந்தீர்
பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே-2
வந்தாரே நமக்காக
பிறந்தாரே நமக்காக -2
2. பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை
எனக்காக அவரே வெளிப்பட்டாரே-2
சொந்த பிள்ளையாக என்னை மாற்றிடவே
சொந்தமில்லா என்னிலே பிறந்தாரே-2
வந்தாரே எனக்காக
பிறந்தாரே எனக்காக -2
3. பிதாவோடு நம்மையும் சேர்த்திடவே
சர்வலோக பாவத்தையும் சுமந்தாரே -2
உன்னதத்தில் உம்மோடு உறவாட
உறவு இல்லா என்னிலே உறவானீர் -2
வந்தாரே உறவாக
பிறந்தாரே உறவாக -2