Yelumpelumbu Navamaaga – எழும்பெழும்பு நவமாக
Yelumpelumbu Navamaaga – எழும்பெழும்பு நவமாக
1.எழும்பெழும்பு நவமாக,
பூர்வீக சாட்சிகளின் ஆவியே;
நோகர் சாமக்காரராக
மதிலில் நின்றோயாமல் கூப்பிட்டே,
பேயை எதித்த்தெந்த நாட்டாரையும்
அழைத்துச் சுவிசேஷம் கூறவும்.
2.ஆ, உமதக்கினி எரிந்து,
எத்தேமும் பரம்பச் செய்யுமேன்.
கர்த்தாவே, கிருபை புரிந்து,
நல் வேலையாட்களை அனுப்புமேன்.
இதோ, உமதறுப்பு, கர்த்தரே,
விஸ்தாரமாம், அறுப்போர் கொஞ்சமே.
3.உமது மைந்தன் தெளிவாக
இவ்வேண்டுதலைச் செய்யச் சொன்னாரே.
அத்தாலே எங்கும் தாழ்மையாக
உமது பிள்ளைகள் உம்மிடமே
சேர்ந்தும்மைக் கருத்தாக நித்தமும்
மன்றாடிக் கேட்பதைத் தந்தருளும்.
4.உமது மைந்தனே கற்பித்த
இவ்விண்ணப்பத்தைத் தள்ளப் போவீரோ,
உமது ஆவி போதித்த
மன்றாட்டும்மாலே கேட்கப்படாதோ,
ஏன், நாங்கள் செய்யும் இந்த ஜெபமே
உமது ஆவியால் உண்மானாதே.
5.அநேக சாட்சிகளைத் தந்து,
நற்செய்தி எங்கும் கூறப் பண்ணுமேன்
சகாயராய் விரைந்து வந்து,
பிசாசின் ராச்சியத்தைத் தாக்குமேன்.
நீர் மகிமைப்பட, எத்தேசமும்
உமது ராச்சியம் பரம்பவும்.
6.உமது சுவிசேஷம் ஓடி,
பரம்பி எங்கும் ஒளி வீசவே
அஞ்ஞானிகளின் கோடாகோடி
அத்தாலே தீவிரித்தும்மிடமே
வரக்கடாட்சித் திஸ்ரவேலையும்
உமது மந்தையில் சேர்த்தருளும்.
7.நமதிருதயத்துக் கேற்ற
நல் மேய்ப்பரை அனுப்புவோம் என்றீர்.
உமது வாக்கை நிறைவேற்ற
மகா உட்கருத்தாயிருக்கின்றீர்.
எங்கள் மன்றாட்டு நிறைவேறிப்போம்.
என்றையமற ஆமேன் என்கிறோம்.