ஆண்டவனே கிருபைகூராய் – Aandavanae kirubai koorai
ஆண்டவனே கிருபைகூராய் – Aandavanae kirubai koorai
பல்லவி
ஆண்டவனே கிருபை கூராய்-எனக்
காதாரம் உன்றனின் பாதாரவிந்தம்
அனுபல்லவி
மீண்டெனின்மேல் தயை பூண்டருள் நாதா
ஈண்டுனின் தாள்பணிந்தேன் திருப்பாதா! – ஆண்
சரணங்கள்
1. துர்க்குணத்தி லுருவானேன்,-பொல்லாத்
தோஷியாய்ப் பேயவன் தோழனாய்ப் போனேன்,
நற்குண மென்னில்நான் காணேன்,-நித்ய
நாச மரண நரகுக்குள்ளானேன்,
சற்குண மன்பு தயைமிகு தேவா!
தாவிப் பிடித்தேனான் மேவிநீ காவா! – ஆண்
2. பாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே,-பாவம்
பாய்வழி யென்செவி வாய் கண் கால் கையே,
நோவென்னைப் பிசித்ததென் ஐயே!-எனை
நோக்கி யுலகுசொல்லும் ஆறுதல் பொய்யே,
ஏவை புத்திரனழு தேங்கல் நோக்காயோ?
என்பாவச் சேற்றை விட்டென்னை தூக்காயோ? – ஆண்
3. சாபத்துக்காளாய்ப் போனேன்,-சீனாய்த்
தன்னிடி குமுறலின் சத்தங்கேட்டேனே,
கோபத்தின் தீயைக்கண்டேனே,-தேவ
கோஷ்ட முணர்ந்தே கலக்கமுற்றேனே,
ஆபத்தில் நீ என் அடைக்கலம் தஞ்சம்,
ஐயையோ எங்கோடும் என் ஏழைநெஞ்சம் – ஆண்
4. பாடெனக்காய்ப் பட்டாயன்றோ?-என்றன்
பத்தாநின்சாவு நான் சாவதற்கென்றோ?
கேடென்னில் நிற்பதும் நன்றோ?-என்னைக்
கேளாதிருக்க உன்றன் மனங்குன்றோ?
நாடறியப் பாடு பட்டுயிர் தந்தாய்,
நம்பினபேர்க்கா யுயிர்தங்கு சென்றாய். – ஆண்