Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு

Deal Score+2
Deal Score+2

பல்லவி

என்ன பாக்கியம், எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்?

அனுபல்லவி

விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன

சரணங்கள்

1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன

2. சாமியைக் கண்டேன் – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் — என்ன

3. அன்னமும் நீயே – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;
மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? — என்ன

4. போதும் இவ்வாழ்வு – பரகதி – போவேன் இப்போது;
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது — என்ன

Enna Paakkiyam Evarkundu
Intha Silakkiyam

Vinnavarum Puvi Meavum Munivarkalum
Mannavarum Kaana Magipanai Yaan Kanden – Enna


Vaanakan thaano Allathithu Vaiyakan thaano
Aanakam Sentru Eluntha Arumporul
Kaanakanth Thannil En Kaiyil Amarnthathu — Enna

Saamiyai Kandean Maakanantham Saalayum kondean
Kaamaru Thengkani Vaaikal thudipathum
Kannum Manamum Kazhikka Vizhippathum – – Enna

Annamum Neeyae Kidaithathar Karunj Sonnamum Neeyae
Minnaru Mega thirukkai Thuranthaiyo
Meathini Thannai Ratxhikka Piranthaiyo – Enna

Poothum Evvalvu Parakathi Povean Ippothu
Yethean Entra Paratheesum Vanthittathu
Ennillatha Selvam En Kaiyil Kittuthu – Enna

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo