Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில்

Deal Score+1
Deal Score+1

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில்

(மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமே
எல்லாம் மறக்க தான் வரம் வேணுமே) – 2
(வலிக்கும் மனசிலே காயவடுக்கள் எல்லாம்
மாய்த்திடவே நாதா இரங்கணுமே) – 2
மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமே
எல்லாம் மறக்க தான் வரம் வேணுமே.

1. என்னுயிர் நண்பர்கள் கூட என்னுள்ளம் உடைத்தனர் நாதா – 2
செய்யாத குற்றங்களாலே சிநேகித்தவர் என்னை முறித்தார்
பகையில்லாது எல்லாம் பொறுக்க, சிநேகிக்க என்னை கற்பிக்கணுமே.
மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமே
எல்லாம் மறக்க தான் வரம் வேணுமே.

2. சகோதரர் என்னை பிரிந்தார், என்னை பெற்றம்மா கூட மறந்தார் – 2
அந்நியமாய் என் சொந்த வீடு, நான் ஆதரவுவில்லாது அலைந்தேன்
இதயத்தில் துக்கம் மறக்க, மன்னித்து சிநேகிக்க துணை செய்யுமே.
(மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமே
எல்லாம் மறக்க தான் வரம் வேணுமே) – 2
(வலிக்கும் மனசிலே காயவடுக்கள் எல்லாம்
மாய்த்திடவே நாதா இரங்கணுமே) – 2
மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமே
எல்லாம் மறக்க தான் வரம் வேணுமே.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo